புதுச்சேரி: வரதராஜப் பெருமாள் கோவிலில் திருஅத்யயன உற்சவம் துவங்கியது.புதுச்சேரி, காந்தி வீதியில், பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, திருஅத்யயன உற்சவம் ( பகல்பத்து - இராப்பத்து உற்சவம்) நேற்று முன்தினம் துவங்கியது.அதாவது, வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் நடக்கும் உற்சவத்தை பகல் பத்து எனவும், ஏகாதசிக்கு பின் பத்து நாட்கள் நடக்கும் உற்சவத்தை இராப்பத்து எனவும், 21வது நாள் உற்சவம் இயற்பா சாற்றுமுறை எனவும் பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.பகல்பத்து உற்சவம் துவங்கியதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனமும், மாலை 5:00 மணிக்கு, உள்புறப்பாடும், சேவை சாற்றுமுறை யும் நடந்தது. வரும் 18ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு, இராப்பத்து உற்சவம் துவங்குகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி மணவாளன், நிர்வாக அதிகாரி ராஜசேகரன், கோவில் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.