அரசமர விநாயகரை இருட்டிய பின்னும், காலை விடிவதற்கு முன்னும் வலம் வரக்கூடாது என்கிறார்களே! உண்மைதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2012 03:02
அரசமரத்தை விடியற்காலையில் சுற்றுவது தான் சிறந்தது, அந்த நேரத்தில் அரசமரத்திலிருந்து வெளிவரும் ஒரு வகையான மருத்துவ குணம் வாய்ந்த காற்று மலட்டுத்தன்மையை நீக்கும் வல்லமையுடையது. குஷ்டரோகம் போன்ற நோய்களையும் நீக்க வல்லது. இது போன்ற நல்ல விஷயங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து அரசமரத்தடி விநாயகராகவும், அரசு, வேம்பு திருணம் நடத்தி வைத்து அஸ்வத்த நாராயணராகவும் வழிபாட்டு முறைகளைமுன்னோர் வகுத்திருக்கிறார்கள்.