பதிவு செய்த நாள்
12
டிச
2018
12:12
அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில்30 லட்சத்து 41ஆயிரத்து 361 ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை முடிந்து பக்தர்களின் காணிக்கை உண்டியல்கள், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணும் பணி நடந்தது. அதில், ரூ. 30 லட்சத்து 41 ஆயிரத்தி 361 ரூபாய் பணம், 214 கிராம் தங்க நகைகள், 246 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமஷே்,செல்வம், மணி, சரவணன், சேகர் ஆய்வாளர்கள் அன்பழகன், சுரஷே், சரவணன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் உடனிருந்தனர்.