ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச.,23ல் ஆருத்ரா தரிசனம் நடைபெறும், என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். டிச.,23ல் ராமேஸ்வரம் கோயிலில் காலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். பின் கால பூஜைகள் முடிந்ததும் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் புறப்பாடாகி அன்று காலை 5:15 மணிக்கு ருத்ராட்ச அலங்காரத்தில் காட்சியளிக்கும் சபாபதி சன்னதி முன்பு எழுந்தருளி, திருவாசகம் பாடல் பாடியதும் ஆருத்ரா தரிசனத்தில் பக்தருக்கு காட்சியளித்தார்.
நடை மாற்றம் : மார்கழி முதல் தேதியான டிச.,16 முதல் ஜன.,15 வரை கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து 4 முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். டிச.,16 ஐ தொடர்ந்து கால பூஜை, உச்சிகால பூஜை, சாயராக்சே, அர்த்தசாம பூஜை முடிந்த இரவு 8:30 மணிக்கு கோயில் நடைசாத்தப்படும், என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.