கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2018 03:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் டிச.,18 அதிகாலை 5:30 முதல் காலை 7:00 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. காலை 9:30 மணிக்கு திருமஞ்சனம், திருவாராதனம், தீபாராதனை, தீர்த்த கோஷ்டி, மாலை 4:30 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் தரிசன வசதிக்காக அதிகாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும், என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.