பதிவு செய்த நாள்
13
டிச
2018
03:12
சபரிமலை: சபரிமலையில், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, குப்பையின் அளவு குறைந்துள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரள ஐகோர்ட் உத்தரவு படி, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு, குடிநீர் வழங் கல் துறை சார்பில், ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.இவற்றுடன், தேவசம்போர்டு மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில், ஆங்காங்கே, மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், சபரிமலை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் குப்பை குறைந்துள்ளது.