Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றத்தில் திருவாதிரை ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மரச்சப்பரம் உபயம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 டிச
2018
12:12

சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 12ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, 13ம் தேதி மிருத்சங்கரணம், ரஷாபந்தனம் நடந்தது. நேற்று காலை, கொடியேற்று விழாவை ஒட்டி, சிவகாமி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி, பிரகாரம் வலம் வந்து, காலை, 9:20 மணிக்கு, நடராஜருக்கு எதிர்புறமுள்ள பிரம்மாண்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.வரும், 18ம் தேதி தெருவடைச்சான், 22ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை, நடராஜர், சிவகாம சுந்தரி, வினாயகர், முருகன் சுவாமிகள், தனித்தனி தேர்களில், நகரின் நான்கு வீதிகளில் வலம் வந்து, மாலையில், மண்டப முகப்பு ராஜசபையில் அருள்பாலிக்கின்றனர். இரவு, 8:00 மணிக்கு, ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது. சிறப்பு விழாவான ஆருத்ரா தரிசனம், வரும், 23ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, பிற்பகல், 2:00 மணிக்கு, ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.பாதம், பிஸ்தா மாலைநடராஜர் கொடி மரத்திற்கு, வில்வம், பூ மாலைகள் மட்டுமே சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஆருத்ரா கொடியேற்றத்தின் போது, கொடிமரத்திற்கு, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டு புடவை மற்றும் பூக்களால் கொடிமர மாலைகள் தயார் செய்யப்பட்டு, கொடிமரத்திற்கு சாத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar