மார்கழி மாத தேய்பிறையின் 11வது நாளை (பவுர்ணமியை
அடுத்த 11ம் நாள்) ’உத்பத்தி ஏகாதசி’ என்பர். ’உத்பத்தி’ என்றால் ’உதயம்’.
முதலில் உதயமான ஏகாதசி என பொருள். முரன் என்ற அரக்கனை அழித்து தேவர்களைக்
காத்த நாள் இது. இதனடிப்படையில் தேவர்கள் இந்நாளில் விரதமிருந்து பெருமாளை
வழிபட்டனர். ஆனால் காலப்போக்கில் மார்கழி வளர்பிறை ஏகாதசியான ’மோட்ச
ஏகாதசி’ முக்கியத்துவம் பெற்றது. வைகானசர் என்னும் முனிவர் தன்
முன்னோர்கள் முக்தியடைவதற்காக இந்நாளில் விரதம் மேற்கொண்டதால் இதற்கு
முக்கியத்துவம் ஏற்பட்டது. இவர் பெருமாள் கோயில் பூஜை முறைகளை
நிர்ணயித்தவர்.