ஏகம்+தசம் என்பதை ஏகாதசம் என்பர். ’ஏகம்’ என்றால் ஒன்று. ’தசம்’ என்றால் பத்து. பத்தும் ஒன்றும் சேர்ந்தால் பதினொன்று. பவுர்ணமி அல்லது அமாவாசை திதியில் இருந்து 11ம் நாளில் வருவது ஏகாதசம். இதுவே திரிந்து ஏகாதசியானது. இவ்வாறு ஒவ்வொரு திதியின் பெயர்களில் அதற்கான எண்கள் ஒளிந்துள்ளன.