பதிவு செய்த நாள்
22
டிச
2018
12:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா விழாவையொட்டி, பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி துவங்கியது. ஆண்டுதோறும் ஆருத்ரா விழாவின்போது, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காஞ்சிபுரம், காந்தி சாலை ஜவுளி வியாபாரிகள், சத்திர தரும பரிபாலன மகமை சங்கம் சார்பில், பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில், நடப்பாண்டு, கும்பகோணம் முருகன் சங்கீத பொம்மலாட்ட குழுவினரின், ‘ஆண்டாள் திருக்கல்யாணம்’ என்ற தலைப்பில், பொம்மலாட்ட நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று கண்டு ரசித்தனர். நாளை நிறைடைகிறது.