பதிவு செய்த நாள்
24
டிச
2018
12:12
திருவண்ணாமலை: ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, மஹா தீப மை சாத்தப்பட்டு, அருணாசலேஸ்வரருக்கு வழிபாடு நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், பூஜை நடந்தது. தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில், நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் எழுந்தருளினர். கடந்த நவ., 23ல், 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட, மஹா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட, தீப மை பிரசாதம், முதலில் நடராஜர் மற்றும் சிவகாமிசுந்தரி அம்மனுக்கு சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், அண்ணாமலையாருக்கு, அரோகரா கோஷம் எழுப்பி, பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், திருமஞ்சன கோபுர வாசல் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்தர்கள் வழி நெடுகிலும், மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.