காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று (டிசம்., 23ல்)ஆருத்ரா உற்சவம் நடந்தது.காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்த ஆருத்ரா உற்சவம் நேற்று (டிசம்., 23ல்) நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று (டிசம்., 23ல்) காலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு, நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, 16 விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை.9.30 மணிக்கு கோ பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின் நடராஜர், சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு சுவாமிகள் மாடவீதி உலா நடைபெறவில்லை. இந்நிகழ்ச்சியில் தர்மபுர ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.