கோவை:சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு திருவிழாவை ஒட்டி, நேற்று முன் தினம் (டிசம்., 23ல்) காலை 5:00 மணிக்கு அகண்டநாம பஜனை துவங்கி, தொடர்ந்து நேற்று (டிசம்., 24ல்) காலை 5:00 மணி வரை நடைபெற்றது.
மாலையணிந்த பக்தர்களுக்கு கோவில் வளாகத்திலும், பொதுமக்களுக்கு, புதிதாக அமைக்கப் பட்டுள்ள அன்னதான மண்டபத்திலுள்ள இரு தளங்களிலும், அன்னதானம் பரிமாறப்பட்டது. பல ஆயிரம் மக்கள் பங்கேற்றனர்.