பதிவு செய்த நாள்
24
டிச
2018
03:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா நடந்தது.
இக்கோயிலில் டிச., 14 ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தினமும் கோயில் திருவாட்சி மண்டபத்தை மாணிக்கவாசகர் வலம் வந்தார். நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகங்கள் முடிந்து தைல காப்பு சாத்துப்படியானது.
உற்ஸவர்களுக்கு அபிஷேகம் முடிந்து காப்பு கட்டப்பட்டு, நடராஜர் சிம்மாசனத்திலும், சிவகாமி அம்பாள் வெள்ளி அம்பாரியிலும் தனித்தனி பூச்சப்பரத்தில்கிரிவலம் சென்று அருள்பாலித்தனர். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நடராஜர், சிவகாமி, மாணிக்க வாசகருக்கு 36 திரவிய அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன.
* உசிலம்பட்டி: ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* வாடிப்பட்டி: சோழவந்தான்பிரளயநாதர் சிவன்கோயிலில் நடராஜர், சிவகாமி, மாணிக்க வாசகருக்குசிறப்பு ஆபிஷேகம் நடந்தது. திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுவாமி நடன கோலத்தில் வீதி உலா வந்தார்.