பதிவு செய்த நாள்
24
டிச
2018
05:12
அன்னூர்:அன்னூரில் புலி வாகனத்தில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது.அன்னூர், தென்னம் பாளையம் ரோட்டிலுள்ள, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 49ம் ஆண்டு ஐயப்பன் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
21ம் தேதி மகா கணபதி ஹோமம் நடந்தது.ஐயப்பனுக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை நடந்தது. 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் (டிசம்., 23ல்) மதியம் 2:30 மணிக்கு, யானை, செண்டை மேளம், ஜமாப் குழு மற்றும் ஐயப்ப பக்தர்களின் பஜனையுடன், சுவாமி ஊர்வலம் துவங்கியது.
புலி வாகனத்தில், ஐயப்பன் அருள்பாலித்தார். வாண வேடிக்கை நடந்தது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஐயப்ப சுவாமியை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு ஊர்வலம் கோவிலை அடைந்தது. மகா தீபாராதனை நடந்தது.