சபரிமலை: சபரிமலையில் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது.அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கியுள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித் துள்ளது. நேற்று (டிசம்., 24ல்) மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று (டிசம்., 24ல்) சன்னிதானத்துக்கு வந்த இரு இளம்பெண்களை தடுத்ததாக, 40 பேர் மீது பம்பை போலீசாரும், 100 பேர் மீது, சன்னிதானம் போலீசாரும், சன்னிதானம் மருத்துவமனை அருகே பஜனை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது சன்னிதானம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.