பதிவு செய்த நாள்
25
டிச
2018
01:12
சேலம்: புனிதராம் கடவுள் மனிதரானார்.புவியில் மகிழ்ச்சி பெருகிடவே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பெத்லகேம் மாநகரிலேஏழ்மையின் எளிய வடிவமாய்மாட்டுத் தொழுவத்திலே மனிதரானார்! தச்சுத் தொழிலாளியான சூசைக்கும்,
அழகும், கண்ணியுமான மரியாவுக்கும்,மகனாய் மடியில் தவழ்ந்தார்மகிழ்ச்சியின் மாவேந்தரானார்!அமைதியற்ற அகிலத்தில் அங்கலாய்க்கும் அன்புக்கும்,ஆரவாரமற்ற அலையாய் அமைதியின் மன்னரானார்! சங்கடமான சங்கீதத்தில் சகதியான சாதியத்தில் சரித்திரத்தை சத்தியமாக்க சமாதானத்தின் சாதனையானார்! கவலைகள் கலைந்திடவும்
இன்னல்கள் இட்டு போகவும்மனக்கசப்புகள் மறைந்திடவும் பாவங்கள் பறந்தோடவும் மகிழ்ச்சியாய்... அமைதியாய்... சமாதானமாய் உம்பிறப்பு எம்மிலும், அனைவரிலும் காண
புத்தொளி காண வந்தருள்வாயே! புதிய ஆண்டை புனிதமாக்குவாயே!
* குன்னூர்:குன்னூர் சின்ன வண்டிச்சோலையில், கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப் பட்டது.குன்னூர் வெலிங்டன் பகுதியில் சின்ன வண்டிச்சோலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் குருசடி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், இளைஞர்களும் ஒன்றிணைந்து, 3 கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, ஏசு பிறப்பு பாடல்களை பாடினர்.இந்த குழுவினர் கூர்காஹில், கூர்காகேம்ப், மலையப்பன் காட்டேஜ், சின்ன வண்டிச்சோலை, ராணுவ குடியிருப்புகளுக்கு சென்று குடியிருப்புகளில் பிரார்த்தனை நடத்தியும், பாடல்களை பாடியும் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சியை நடத்தி கொண்டாடினர். தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவை நடந்தது. சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நள்ளிரவு, 12:00 மணிக்கு மவுன அஞ்சலி நடத்தி, பிரார்த்தனையும் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.