பதிவு செய்த நாள்
25
டிச
2018
01:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில் மண்டல பூஜை திருவிழா இன்று துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது.விழாவையொட்டி இன்று மாலை, 6:30 மணிக்கு, பக்தியிலும், பண்பாட்டிலும் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிது.
நாளை (26ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு பக்தி மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, 11:00 மணிக்கு மகேஸ்வர பூஜையை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.மாலை, 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமிகள் பரிவார மூர்த்திகளுடன் தேர்த்திருவீதி உலா மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. மண்டல பூஜையையொட்டி அன்னதானத்துக்கு, அரிசி, பருப்பு, காய்கறி, நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வழங்குகின்றனர். மண்டல பூஜை ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் ஐயப்பா சேவா சங்கம், ஐயப்பா சேவா அணியினர் செய்து வருகின்றனர்.