அன்னூர்:மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் நேற்று (டிசம்., 24ல்) மகா அபிஷேகம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா நிறைவு நாளான நேற்று (டிசம்., 24ல்) காலையில் திருவாசகம் வாசிக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு அன்னூர் அர்ச்சகர்கள் சங்கம் சார்பில், மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து, அருள்பாலித்தார். கோவில் சிவாச்சார்யார்கள் கவுரவிக்கப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.