பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
கோவை :ஸ்ரீஐயப்பா பூஜா சங்கம் சார்பில், 68வது பூஜா மஹோத்ஸவம், இன்று டிசம்., 26ல் துவங்கி, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
கோவை, ராம்நகர், சத்தியமூர்த்தி சாலையில் உள்ள, ஸ்ரீஐயப்பா பூஜா சங்கத்தில், இன்று டிசம்., 26ல் காலை 5:30க்கு கணபதி ஹோமம், 9:00க்கு, நவக்ரஹ ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம் நடக்கிறது. இரவு, 7:00க்கு, பாலக்காடு சாத்தப்புரம் ஸ்ருதி-ஸ்ரீநிதி சகோதரிகள் இசை நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (டிச., 27) காலை, 9:00க்கு மஹா ருத்ரயக்ஞம், உபநிஷத் பாராயணம்; இரவு, 7:00க்கு, போத்தனூர் ஸ்ரீகெளதம் பாகவதர் குழுவினர் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.டிச., 28 காலை, 7:30க்கு, நவசண்டி மகாயக்ஞம், பகல், 12:00க்கு, குமாரி பூஜை, வடுகபூஜை நடக்கிறது. இரவு, 7:00க்கு, பஹ்ரைன் ஸ்ரீஅனந்த பத்மநாபன் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடைபெறுகிறது.
டிச., 29 காலை, 7:00க்கு, ஹரிஹரபுத்ர மூலமந்த்ர ஹோமம் நடக்கிறது. 8:00க்கு லட்சார்ச் சனை, அஷ்டாபிஷேகம் நடக்கிறது. இரவு, 7:00க்கு, கொச்சின் கிருஷ்ணன் குழுவினர் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.டிச., 30 காலை, 5:00க்கு, சூர்யநமஸ்காரம், ருத்ராபிஷேகம், சண்முகஅர்ச்சனை நடக்கிறது. காலை, 9:00க்கு, பஞ்சவாத்யம் முழங்க திருவாபரண பெட்டியுடன், மூன்று கஜவீரர்களுடன் திருமஞ்சன உலா நடக்கிறது. 11:00க்கு புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம், மாலை, 6:05க்கு, புஷ்ப பல்லக்கில், மூன்று யானைகள், பஞ்சவாத்யம் முழங்க, பூக்காவடிகளுடன் ஐயப்பன் வீதி உலா, மாலை, 6:30க்கு, சங்கீதப்பிரியா பஜன் மண்டலி குழுவினர் இசை நிகழ்ச்சி நடக்கிறது.டிச., 31 காலை, 9:00 முதல், மேட்டுப்பாளையம் ஸ்ரீவாசுதேவன் குழுவினர் திவ்யநாமபஜன், இரவு, 12:00 மணி வரை தொடர்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீஐயப்பா பூஜா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.