பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 12 ஜோதிர்லிங்க தரிசனம் நிகழ்ச்சி நாளை துவங்குகிறது. பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பில், 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நாளை (27ம் தேதி) துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.நாளை காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரையும்; 28ம் தேதி முதல், 31ம் தேதி வரை காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறுகிறது. ஜோதிர்லிங்க தரிசனத்தில், அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.