பதிவு செய்த நாள்
28
டிச
2018
02:12
பொன்னேரி : அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின், 38ம் ஆண்டு விளக்கு பூஜை, வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, திருவேங்கிடபுரம் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின், 38ம் ஆண்டு விளக்கு பூஜை, நேற்று நடைபெற்றது.காலை, 7:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, கஜ பூஜை, கோ பூஜைகள் நடைபெற்றன.மாலை, 6:00 மணிக்கு, திருவேங்கிடபுரம் ஸ்ரீதேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் இருந்து திருவிளக்கு பூஜை புறப்பட்டது.பெண்கள், சிறுவர்கள், தாழவிளக்குகளுடன் ஏந்தி, பக்தபாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சென்டை மேளம் முழுங்க, அய்யப்ப சுவாமி ஊர்வலமாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சாஸ்திரி தெரு, அன்னை இந்திரா தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஊர்வலம், பொன்னியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.அங்கு, அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களின் சரண கோஷங்களும் நடைபெற்றன.