புதுச்சேரி: சுப்பையா நகர் அய்யப்பன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் 9ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் அய்யப்ப சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் இரவு 7.௦௦ மணிக்கு நடந்தது. விழாவில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், பொது மக்கள் செய்திருந்தனர்.