பதிவு செய்த நாள்
30
டிச
2018
12:12
கோவை:அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், வரும் ஜன., 5ல், 27ம் ஆண்டு தேர் திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று காலை, 10:00 முதல், பகவான் ஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவிக்கு திருமஞ்சன சேவை, கொடிசியா அருகில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில் நடக்கிறது.மரத்தாலான மூன்று விக்கிரகங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை திருமஞ்சனம் மேற்கொள்ளப்படுவது சிறப்பு. புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருமஞ்சனத்தை தொடர்ந்து, 1,008 உணவு பதார்த்தங்களால் சுவாமிக்கு படைக்கப்பட்ட பின், கஜவேஷத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெகன்நாதருக்கு ஆராதனை நடக்கும். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதன்பின், தேர் திருவிழா நிகழ்வு துவங்கும். மேலும் விவரங்களுக்கு, 93613 60012, 77083 58624, 82491 31264