பதிவு செய்த நாள்
01
ஜன
2019
01:01
கோபிசெட்டிபாளையம்: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தங்கத்தேரில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கோவில் உட்பிரகார உலா கொண்டு வரப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிசம்பர் 27ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, பக்தர்கள் பூமிதிக்கும் குண்டம் திருவிழா, வரும் 10ல், நடக்கிறது.
அதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். பூச்சாட்டுக்கு பின், டிசம்பர் 28 முதல், வரும், 8 வரை, தினமும் இரவு 7:15 மணிக்கு, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 12 நாட்களுக்கு நடக்கும். நேற்றிரவு (டிசம்., 31ல்) , கோவில் வளாகத்தை சுற்றி, உற்சவர் அம்மன் அலங்கரித்து, தங்கத்தேரில் உட்பிரகார வலம் கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தததால், கோவில் வளாகமே நேற்றிரவு (டிசம்., 31ல்) விழாக்கோலம் பூண்டிருந்தது.