பதிவு செய்த நாள்
01
ஜன
2019
01:01
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, கோவில் புதூரில், கரிவரதராஜபெருமாள் கோவிலில், ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. அனுமன் ஜெயந்தி விழா, வரும், 5ல், நடக்கிறது.
இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படுகிறது. இதேபோல், புன்செய்புளியம்பட்டி அடுத்த, அண்ணாநகர் கதிர்பெருமாள் கோவிலில் உள்ள, 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. பின், வடைமாலை மற்றும் துளசி மாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.