பதிவு செய்த நாள்
02
ஜன
2019
03:01
திருப்பூர்:சிவன்மலையில், எட்டு திசைக்கும் அஷ்டதிக் பாலகர்கள் புதுப்பித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு,
வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றை எட்டு திசைகள் என்கிறோம். அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர். இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இவர்களை, வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம்.காங்கயம், சிவன்மலையில், வரும் , 21ல் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. இதில், சுவாமி மலையில் இருந்து இறங்கி தேரோட்டம் நிறைவு பெரும் வரையில், அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ் வரர் கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.ஜன., 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் கிராம சாந்தி நடைபெறும். இதில், வீரகாளியம்மன், விநாயகர், சூல தேவர் வலம் வருவார்கள்.வரும் பகுதியில் இந்த அஷ்டதிக் பாலகர்கள் இருக்கும் இடத்தில் பூஜை செய்வார்கள்.
இதற்காக, நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) அஷ்டதிக் பாலகர்கள் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.