பதிவு செய்த நாள்
03
ஜன
2019
02:01
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும், முருக பக்தர்கள் ஆண்டுதோறும், அலகு குத்தி, பறவைக்காவடி ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, 24ம் ஆண்டு, பறவைக்காவடி ஊர்வலம், நேற்று (ஜன.,2ல்) மாலை, துவங்கியது. பவானிசாகர், டணாய்க்கன் கோட்டை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட முருகன் தேர்பவனியுடன் பக்தர்கள் பறவைக்காவடியில் தொங்கியபடி ஊர்வலமாக சென்றனர். டணாய்க்கன் கோட்டை கோவிலில், புறப்பட்ட ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் சதுக்கம், சிவில் குடியிருப்பு வழியாக, இலங்கை தமிழர் முகாம், நாகம்மாள் கோவிலை அடைந்தது.