ஈரோடு: பவானி, பழனிபுரத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா, ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும், 9ல் நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமம், பக்தர்கள் ஊர்வலமாக சென்று கூடுதுறையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. வரும், 11ல் மறுபூஜை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.