மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2019 03:01
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். கடந்த மூன்று மாதங்களாக உண்டியல் திறக்கப்படவில்லை. நேற்று (ஜன., 2ல்) காலை பரமக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் ராமசாமி தலைமையில் மடப்புரம் கோயில் செயல் அலுவலர் செல்வி, கோயில் ஊழியர்கள், அய்யப்பா சேவா சங்கத்தினர் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயில் வளாகத்தில் அன்னதான உண்டியல் உட்பட ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.ரூ. 32.91 லட்சம், தங்கம் 255 கிராம், வெள்ளி 471 கிராம் காணிக்கையாக கிடைத்தது.