பதிவு செய்த நாள்
04
ஜன
2019
01:01
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா, வரும், 13ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், மலைக்கு மேல் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா, 15 நாள் நடக்கும். வரும்,12ல் கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. 13ம் தேதி பகல், 12:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 20ம் வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 21 காலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகமும், காலை, 7:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், ராதாகிருஷ்ணன், ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். வரும், 25ல் வள்ளி, தெய்வானை சமதே முத்து குமாரசாமிக்கு மகா அபி?ஷகம் நடக்கிறது. 26ல் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தைப்பூச தேர் திருவிழா நிறைவடைகிறது.