பழநி:பழநி மலையில் முருகன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் அதிகமுள்ளன. நேற்று காலை 11:30 மணிக்கு மலைக்கோயிலில் பஞ்சாமிர்தம் ஏற்றிச்செல்லும் மெட்டீரியல் ரோப்கார் ஸ்டேசன் அருகே குரங்குகள், பறவைகள் நீண்டநேரமாக கூச்சலிட்டன. கோயில் பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து கொண்டிருந் தது.தீயணைப்புத் துறை வீரர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்தனர். 15அடி நீளம், 100 கிலோ எடையுடன் இருந்த அந்த பாம்பை, வனத்துறையினர் மூலம் கொடைக்கானல் ரோடு காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.