இயற்கையை எதிர்த்தால் துன்பம்: சண்முகானந்த சுவாமிகள் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2019 02:01
கோவை:இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் போது, நமக்கு துன்பம் துவங்கும், என்று சண்முகானந்த சுவாமிகள் பேசினார்.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கோவை கிக்கானிப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில், எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இமயமலை துறவி சண்முகானந்த சுவாமிகள் பேசியதாவது:இறைவன் எப்போ வருவாரோ என, காத்திருக்க வேண்டும். அப்போது தான் அவன் நம்மைத் தேடி வருவான். இயற்கைக்கு எதிரான செயல்களை செய்யும் போது துன்பம் வரும். உலகில் இறைவனுக்கு செய்யும் தொண்டு மட்டுமே உண்மை. நடப்பது அனைத்தும் இறைவன் செயல். நம் கஷ்டத்தை இறைவனிடம் தெரிவித்தால் போதும். அவனிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே, முக்தி அடைய முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.