பல்லடம்:தொலைகாட்சி நிகழ்ச்சி வாழ்க்கைக்கு உதவாது; ஆன்மிக நிகழ்ச்சி, மனதை ஒருநிலைபடுத்தும் என, முத்து சிவராமசாமி அடிகள் தெரிவித்தார்.ஸ்ரீசத்ய சாயிபாபா சேவா சமிதி சார்பில், மார்கழி உற்சவ பெருவிழா, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நடந்தது.அம்மன் பெருமை என்ற தலைப்பில், செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகள் பேசியதாவது;ஆன்மிக சொற்பொழிவு, உபன்யாசத்தால் மனிதர்களின் வாழ்க்கை மேம்படும்.
வாழ்க்கையில் தடம் மாறி செல்லாமல் இருக்கவே, முன்னோர்கள் ஆன்மிக கருத்துகளை விதைத்து சென்றனர்.மனம் அமைதியாகி, தெய்வீக சிந்தனை மேலோங்கவே கோவில் களுக்கு செல்கிறோம். மனதை ஒருநிலைப்படுத்தி, வழிபட்டால் எண்ணம் நிறைவேறும். தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாழ்க்கைக்கு உதவாது; ஆன்மிக நிகழ்ச்சி, மனதை ஒருநிலைப்படுத்தும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, ஸ்ரீச்தய சாயிபாபா சேவா சமிதி சார்பில் பஜனை நடந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.