பதிவு செய்த நாள்
05
ஜன
2019
11:01
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடக்கும் அமாவாசை பூஜையில் பங்கேற்க செக் குடியரசு நாட்டை சேர்ந்த பக்தர்கள் 55 பேர் மலையேறி வந்தனர்.செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ்பைபர் 65, என்பவர் தலைமையில் அந்நாட்டினர் சிலர் இந்துமத நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். கடந்த 6 ஆண்டாக தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்கின்றனர். இந்தாண்டு கடந்த டிச.26 அன்று தமிழகம் வந்த இவர்கள் 55 பேர், தஞ்சாவூர், கும்பகோணம், நவக்கிரக கோயில்கள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, குற்றாலம் கோயில்களில் தரிசனம் செய்து விட்டு நேற்று சதுரகிரி வந்தனர். அங்குள்ள ஆர்.ஆர்.மடத்தில் இவர்களுக்கு வரவேற்பளிக்கபட்டது. பின்னர் வனத்துறை மற்றும் போலீசாரின் பாதுகாப்புடன் மலையேற துவங்கினர். நேற்றிரவு அங்கு தங்கி இன்று கோயிலில் நடக்கும் அமாவாசை பூஜையில் பங்கேற்கின்றனர். மலையிலிருந்து இறங்கி தேக்கடி வழியாக சபரிமலை செல்ல உள்ளனர்.தாமஸ்பைபர் கூறுகையில், இயற்கை சூழல், மூலிகை வனங்கள் பற்றி கேள்விப்பட்டு சதுரகிரிக்கு வந்துள்ளோம். எங்கள் குழுவில் உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க உள்ளோம், என்றார்.நெற்றியில் குங்குமம் ...சிவாய கோஷம்சதுரகிரிக்கு வந்த செக் குடியரசு பக்தர்கள் சபரிமலைக்கு மாலையணிந்து கருப்பு உடையுடன் காணப்பட்டனர். நெற்றியில் குங்குமத்துடன் காணப்பட்ட இவர்கள், சதுரகிரியில் ஓம் நமசிவாய கோஷத்துடன் மலையேறினர்.