பதிவு செய்த நாள்
05
ஜன
2019
11:01
அவலுார்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், கப்ளாம்பாடியில் மூன்று நாட்களாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விஸ்வரூப கோதண்டராமர் சிலை, நேற்று அவலுார்பேட்டை வழியாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றது.பெங்களூரு, ஈஜிபுரத்தில் நிறுவுவதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தில், 64 அடி உயரத்தில், 3 லட்சம் கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை, கார்கோ லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.
இழப்பீட்டு தொகைஇந்த சிலை, 1ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டிலிருந்து புறப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், கப்ளாம்பாடி கிராமத்திற்கு, மாலை, 3:00 மணிக்கு வந்தது. பயணத்தை தொடர இடையூறாக உள்ள வீடுகளை இடிக்க வேண்டியிருந்ததால், சிலை கப்ளாம்பாடி கிராமத்திலேயே நிறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து சிலை அமைப்பு குழுவினர், சிலை செல்ல இடையூறாக இருந்த வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கினர். பின் கப்ளாம்பாடி, அவலுார்பேட்டையில், தலா, ஒரு வீடும், குந்தலம்பட்டில் ஒரு கீற்றுக்கொட்டகையும், கப்ளாம்பாடியில், இரண்டு மின் கம்பங்களும் அகற்றப்பட்டன. டயர் வெடித்ததுசாலை வளைவுகளில் மண் கொட்டி சீரமைத்ததை தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பின், நேற்று காலை,10:40 மணிக்கு கப்ளாம்பாடியிலிருந்து சிலை புறப்பட்டது. 11:20க்கு குந்தலம்பட்டு கிராமத்தில் உள்ள சாலை வளைவில், கார்கோ லாரி வர முடியா மல் நின்றது. இரண்டு இடங் களில் டயர் வெடித்தது. சாலை வளைவு பகுதியில், மேலும் மண் கொட்டி சீரமைத்த பின், மாலை, 3:50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அவலுார்பேட்டை வழியாக மாலை, 5:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடி கிராமத்திற்கு சென்றடைந்தது.