கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10 ஆயிரத்து 8 வடமாலை சாற்றி, சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராமருக்கு நேற்று (ஜன., 6ல்) காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11:00 மணியளவில் சிறப்பு சாற்றுமுறை, தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணியளவில் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10 ஆயிரத்து 8 வடமாலை சாற்றி, சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.