பதிவு செய்த நாள்
12
ஜன
2019
02:01
திருப்பூர்: சிவன்மலை மற்றும் சென்னிமலை உட்பட முருகன் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சென்னிமலை, சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று, காலை கணபதி ேஹாமம், இரவில் கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 14ம் தேதி காலை, மண்டப கட்டளை, பல்லக்கு சேவை; 15ம் தேதி மயில்வாகன காட்சி; 16ல் மண்டப அறக்கட்டளை; 17 ல், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சி; வரும், 18 ல் யானை வாகன காட்சி; 19ல் கைலயங்கிரி -காமதேனு வாகன காட்சி நடைபெறும்.இதேபோல், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலிலும், தைப்பூச விழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவிலின் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.