காரைக்குடி: தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்குடி நகரத்தார் காவடி எடுத்து பாதயாத்திரையாக பழநி செல்கின்றனர். இதற்காக நேற்று கும.பழனியப்பன் தலைமையில் 58 பேர் நகர சிவன் கோயிலில் காவடி கட்டினர்.
மாலை 3:00 மணிக்கு நகர் வலம் வந்தனர். செஞ்சை பெருமாள்கோயில், செக்காலைரோடு, முத்துப்பட்டணம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கொப்புடையம்மன் கோயிலை அடைந்தனர். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு இன்று மாலை குன்றக்குடியை அடைவர். அங்கு மற்ற பகுதி நகரத்தார் காவடிகளுடன் வருவர். ஒன்றாக சேர்ந்து பாதயாத்திரையாக புறப்படுவர். கும.பழனியப்பன் கூறியதாவது: இப்பயணம் 400 ஆண்டுகளாக நடக்கிறது. காரைக்குடியிலிருந்து அரண்மனை பொங்கல் காவடிகளுடன் செல்கிறது. எட்டு நாட்களில் பழநியை அடைவோம். அனைத்து ஊர் நகரத்தாரும் சேர்ந்து தண்டாயுதபாணிக்கு அபிேஷகம் செய்வோம். திரும்பவும் அதே வழிமுறையில் நடந்து வருவோம். சென்று, வர 20 நாட்கள் பிடிக்கும். சென்ற ஆண்டு 400 காவடிகள் வந்தது. இந்த ஆண்டு அதை விட அதிகரிக்கும். காரைக்குடி நகர்வலத்தை 25 ம் ஆண்டு வெள்ளி விழாவாக கொண்டாடுகிறோம், என்றார்.