பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
திருப்பூர்:தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப, தை மாதத்தில் இருந்து, உத்திராயணம் புண்ணிய காலம் துவங்குவதாக, இந்து புராணங்கள் கூறுகின்றன. அறுவடை திருநாளான தை பொங்கல் பண்டிகையில், வாழ்வளிக்கும் இறைவனையும், சூரியனையும் வழிபடுவது, இந்துக்கள் வழக்கம். பொங்கல் பண்டிகையான நேற்று, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட, அனைத்து கோவில்களிலும், நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது.மார்கழி மாத வழிபாடு, நேற்றுடன் பூர்த்தியடைந்தது. அனைத்து கோவில்களிலும், நேற்று சர்க்கரை பொங்கல், கரும்பு வைத்து பக்தர்கள் வழிபட்டனர். சர்க்கரை பொங்கல், கரும்பு, அரிசி முறுக்கு வைத்து, பக்தர்கள் வழிபட்டு, பிரசாதமாகவும் வழங்கினர்.திருப்பூர் எம்.எஸ்., நகர் நாகாத்தம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில் உட்பட, அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.