பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
தேனி:தேனி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயில், வீரப்ப அய்யனார் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்கார அபிஷேகங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
போடி:* தைப்பொங்கலை முன்னிட்டு, போடி சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியர் செய்திருந்தார்.
* போடி சுப்பிரமணிய சுவாமி கோயில், புதுார் சங்கடகர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பாலவிநாயகர் கோயிலில் விநாயகர், ஐய்யப்பன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன.
* போடி அருகே பிச்சாங்கரை ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர், மேலச்சொக்கநாதர், தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
* போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.* பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் பால சுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
* கம்பம்ரோடு காளியம்மன் கோயில், குருவப்ப பிள்ளையார் கோயில், கைலாசபட்டி, கைலாசநாதர் மலைக் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், தாமரைக்குளம் வெங்கிடாஜலபதி கோயில்,லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றுச் சென்றனர்.
* நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணனர், ராதைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பொங்கல் வைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.