பதிவு செய்த நாள்
16
ஜன
2019
02:01
புன்செய்புளியம்பட்டி: கொண்டையம்பாளையம், பொன்மலை ஆண்டவர் கோவிலில்,தைப்பூச தேரோட்டம், வரும் 21ல், நடக்கிறது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அடுத்த, வரப்பாளையம் பஞ்., கொண்டையம்பாளையத்தில், 200 ஆண்டுகள் பழமையான பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, வரும் 19ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பின், வெள்ளி மயில் வாகனத்தில், சுவாமி வீதி உலா, 20ம் தேதி, மயில் வாகன உலா, இரவு, சந்தனக்காப்பு நடக்கிறது. 21ம் தேதி, அதிகாலை 3:00 மணிக்கு, மூலவருக்கு, மகா அபிஷேகம், 4:00 மணிக்கு, தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில், திருவீதி உலா, அதிகாலை வரை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு, அருள் பாலிக்கின்றனர். 22ம் தேதி, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.