பதிவு செய்த நாள்
16
ஜன
2019
02:01
ஈரோடு: ஈரோட்டில், சவுடேஸ்வரியம்மன் கோவில், பொங்கல் திருவிழாவில், வீரகுமாரர்கள் கத்தி போட்டு சக்தி அம்மனை அழைத்து வந்தனர். ஈரோடு, தில்லை நகரில் உள்ள, ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு காரைவாய்க்காலில் துவங்கிய ஊர்வலத்தில், பெண்கள் கலசம் எடுத்து வந்தனர். சக்தி அழைத்தலின் போது, வீரகுமாரர்கள் கத்திபோட்டபடி, அம்மனை அழைத்து வந்தனர். சக்தி அழைப்பு ஊர்வலம், காரை வாய்க்கால், சின்னமாரியம்மன் கோவில், பி.எஸ்., பார்க் தெப்பகுளம் வீதி வழியாக கோவிலில் நிறைவடைந்தது. அதன் பின், சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது. இரவு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது.