மேலூர்: மேலூர் தும்பைபட்டியில் மாட்டுபொங்கலை முன்னிட்டு வீரகாளியம்மன்கோயிலில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இவ்விழாவையொட்டி கிராமத்து சார்பில் பணம் வசூலித்து முஸ்லிம்மதத்தைச் சேர்ந்த தரகு வகையறாவிடம் புத்தாடைகள் வாங்கப்பட்டன.பெரியவர்கள் முன்னிலையில் பெரிய மந்தை திடலில் அவை வைக்கப்பட்டு சாமி கும்பிட்டனர்.
இதைதொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க தரகு வகையறாவை சேர்ந்தவர் புத்தாடைகளை சுமந்து கோயிலுக்கு எடுத்துச்சென்றார். அங்கு அம்மன் மற்றும் கோயில் காளைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு மஞ்சு விரட்டு நடந்தது. முன்னதாக மதநல்லிணக்க பொங்கல் வைக்கப்பட்டது.