பதிவு செய்த நாள்
17
ஜன
2019
02:01
வால்பாறை: வால்பாறையை சுற்றியுள்ள கோவில்களில், பொங்கல் பண்டிகை மற்றும் அம்மன் திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப் பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜன.,16ல்) முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
ஈட்டீயார் எஸ்டேட் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் (ஜன., 15ல்) அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கல்லார் எஸ்டேட் மாரியம்மன் கோவில், திருவிழா கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று (ஜன., 16ல்)அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், இன்று (ஜன., 17ல்) காலை மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.சோலையார் எஸ்டேட் மூன்றாவது டிவிஷன் மாரியம்மன், முனீஸ்வரன் திருக்கோவிலின், திருவிழாவில், நேற்று (ஜன., 16ல்) அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
சோலையார் எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று (ஜன., 16ல்) அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவில், இன்று காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், ஸ்ரீராமர்கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், காமாட்சியம்மன் கோவில் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.