குளித்தலை அடுத்த, இரணியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2019 02:01
குளித்தலை: குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாரியம்மன்கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், நேற்று (ஜன., 17ல்)காலை, 9:00 மணியளவில் கிராம பொது மக்கள் சார்பில், குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். கோவிலை சுற்றி வந்த கிராம மக்கள், புனித நீரை ஊற்றி வழிபட்டனர். இன்று (ஜன., 18ல்) காலை, 10:00 மணியளவில் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் தலைமை வகிக்கிறார். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.