பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
அன்னூர்:குமரன்குன்று கோவில் தைப்பூச தேரோட்டம் இன்று (ஜன., 21ல்) நடக்கிறது. குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு தைப்பூத தேர்த்திருவிழா, 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
வள்ளி தெய்வானை சமேதர கல்யாண சுப்பிரமணியசாமிக்கு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, 19ம் தேதி வரை, தினமும் காலை 6:30 மணிக்கு அபிஷேக பூஜையும், 7:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது.நேற்று (ஜன., 20ல்) அம்மன் அழைப்பு நடந்தது. இன்று (ஜன., 21ல்) அதிகாலையில், கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.எம்.பி., எம்.எல்.ஏ.,க் கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 22ம் தேதி இரவு பரிவேட்டையும், 23ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.