பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
வால்பாறை:வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று (ஜன., 20ல்) மாலை நடந்த திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று மாலை, 3:30 மணிக்கு திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டு, மாலை, 4:30 மணிக்கு முருகன் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று (ஜன., 21ல்) காலை, 10:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும், அதனை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூசவிழாகுழு தலைவர் வள்ளிகண்ணு, செயலாளர் மயில்கணேஷ், பொருளாளர் சிந்துசெல்வம் உட்பட பலர் செய்து வருகின்றனர்.