பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
நிலக்கோட்டை : முத்துக்காமன்பட்டியில் ஆகாசபாண்டி முனீஸ்வரர் பந்தானம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜையுடன் முதல் யாக பூஜைகள் துவங்கின. லட்சுமி, சுதர்ஷன, துர்கா, தன ஹோமங்கள் நடந்தன.
இரண்டாம் நாளில் கணபதி பூஜையுடன் துவங்கி பூர்ணாகுதி, ஸ்பர்சாஹூதி, யாத்ராதானம் நடந்தது. புண்ணிய நீர் கொண்டுவரப்பட்ட கடங்கள் கோயில் கோபுரத்தை சுற்றி வந்து கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார பகுதி கிராமத்தினர் பங்கேற்றனர்.
எரியோடு: எரியோடு மின்வாரிய அலுவலகம் எதிர்புறமுள்ள பாபா நகரில் ஷீரடி சாய்பாபா ஞானாலயம் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் (ஜன.,19) மாலை பன்னிரு திருமுறை பாராயணத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று (ஜன.,20) காலை கடங்கள் புறப்பாடாகி ஷீரடி சாய்பாபா, மகா கணபதி, ஆஞ்சநேயர், நந்தி, ஞானப்பாதக்கமலம்விக்கிரங்களுக்கு புனித நீருற்றி கும்பாபி ஷேகம் நடந்தது.
திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசு தேசி பரமாச்சாரியார் நடத்தி வைத்தார். சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டினை நிர்வாகி சவடமுத்து மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.