பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
குளித்தலை: குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., வெள்ளாளப்பட்டி கிராமத்தில், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜன., 20ல்) விமரிசையாக நடந்தது. நேற்று முன் தினம் (ஜன., 19ல்)காலை, குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்துச் சென்ற ஊர்வலம் நடந்தது. நேற்று(ஜன., 20ல்) காலை, 10:00 மணியளவில், சிவாச் சாரியார்கள் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
முன்னதாக, யாகசாலையில் மூன்று கால பூஜை நடந்தது. இதேபோல், நெய்தலூர், கட்டாணி மேடு கிழக்குத் தெரு மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜன., 20ல்) நடந்தது. காலை, 9:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இவ்விழாக்களில், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாக் குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.